Bangladesh squad: சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த லிட்டன் தாஸ் இலங்கை ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது ஜூலை 2ஆம் தேதி முதலும், டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் இதில் ஒருநள் மற்றும் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு, பல்லகலே, தம்புளா உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை ஒருநாள் தொடருக்கான மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையில் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் மூலம் மெஹிதி ஹசன் மிராஸ் வங்கதேச அணியின் கேப்டனாக அடுத்த ஓராண்டிற்கு தொடரவுள்ளார். இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள முஷ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் டஸ்கின் அஹ்மத் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் டி20 அணியின் கேப்டன் லிட்டன் தாஸும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். முன்னதாக லிட்டன் தாஸ் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஷமிம் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத் மற்றும் முகமது நைம் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் முன்னாள் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, பர்வேஸ் ஹொசைன் எமான், ஜக்கர் அலி, ரிஷாத் ஹொசைன் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

வங்கதேச ஒருநாள் அணி: மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹ்ரிடோய், லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, ஹசன் மஹ்மூத்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News