பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் ஸாக் கிரௌலி ஒரு ரன்னிலும், கூப்பர் கன்னொலி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டி - ஜோஷ் இங்லிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

Advertisement

பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களில் ஆரோன் ஹார்டியும், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 64 ரன்களில் ஜோஷ் இங்லிஸும் விக்கெட்டை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.4 ஓவர்களில் பெர்த் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மெல்போர்ன் அணி தரப்பில் டாம் ரோஜர்ஸ், சதர்லேண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் அணிக்கு குயின்டன் டி காக் - ஜோ கிளார்க் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் குயின்டன் டி காக் 23 ரன்களிலும், ஜோ கிளார்க் 32 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜேக் ஃபிரெசர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மேடின்சன் 9 ரன்களிலும், ஜானதன் வில்ஸ் 8 ரன்களிலும், சதர்லேண்ட் 5 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஷான் மார்ஷ் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது.

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் லான்ஸ் மோரிஸ், ஆண்ட்ரூ டை தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அரைசதம் கடந்த ஜோஷ் இங்கிலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News