அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Advertisement

இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.  அதன்படி இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது ஷமி ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.

Advertisement

இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதன்படி ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணியுடன் இந்த டெஸ்ட் அணி பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்த பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் காயம் காரணமாக பயிற்சியில் இருந்து பாதியிலேயெ வெளியேறினார். 

மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக எதிர்வரும் பார்டர் காவஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவது கேள்விகுறியானது. இந்நிலையில் தான் காயம் காரணமாக ஷுப்மன் கில் இத்தொடரில் பங்கேற்காத பட்சத்தில், அந்த இடத்தில் உள்ளூர் மற்றும் ஆஸ்திரேலிய ஏ தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆஅகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்றைய தினம் இந்திய ஏ அணி வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், அதில் தேவ்தத் படிக்கல் மட்டும் இந்திய டெஸ்ட் அணியுடன் ஆஸ்திரேலியாவில் பயணிக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஷுப்மன் கில் விளையாடாத பட்சத்தில் அந்த இடத்தை தேவ்தத் படிக்கல் நிரப்புவார் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன் ஆகியோர் தாயகம் திரும்பியுள்ளனர். 

 

Advertisement

இதனால் அவர்களுக்கான வாய்ப்பும் ஏறத்தாழ முடிவடைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் தேவ்தத் படிக்கல்லை இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்த்தது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும் ஷுப்மன் கில்லின் காயத்தை கருத்தில் கொண்டு அவரை ரிஸர்வ் வீரர்கள் பட்டியலில் பிசிசிஐ அணியுடன் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News