IND vs AUS: டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு - பிசிசிஐ!

Updated: Tue, Feb 14 2023 20:25 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஷ்ரேயஸ் ஐயர். தற்போது ஆஸி. அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாதமியில் உடற்தகுதிச் சான்றிதழைப் பெற்ற பிறகே அவரால் இந்திய அணியினருடன் மீண்டும் இணைய முடியும் என தெரிவிக்கப்பட்டது. 

அதனால் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடாத நிலையில் சூர்யகுமார் யாதவ்  அவருக்கு பதிலாக அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது, பிப்ரவரி 17 முதல் டெல்லியில் தொடங்கவுள்ள 2ஆவது டெஸ்டில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை வெற்றிகரமாக முடித்துள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக டெல்லியில் அணியுடன் இணைவார்” என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை