உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற்றுவரும் இங்கிலாந்து - இலங்கை மற்றும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவடைந்துள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியும் என வெற்றிபெற்று அசத்தியுள்ளன. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூ முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் இரண்டாம் இடத்திலும், டேரில் மிட்செல் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3 இடங்கள் முன்னேறி 4ஆம்  இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா 6ஆவது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்து அசத்தியுள்ளனர். அதேசமயம் வங்கதேசத்திற்கு எதிராக சொதப்பிய பாபர் ஆசாம் 6 இடங்கள் பின் தங்கி 09ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், இப்போட்டியில் சதமடித்து அசத்திய முகமது ரிஸ்வான் 7 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோல் வங்கதேச அணியின் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 7 இடங்கள் முன்னேறி 17ஆம் இடத்தையும், இலங்கை அணியின் தினேஷ் சண்டிமால் 4 இடங்கள் முன்னேறி 23ஆம் இடத்தையும், கமிந்து மெண்டிஸ் 6 இடங்கள் முன்னேறி 36ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் 22 இடங்கள் முன்னேறி 44ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வரும் நிலையில், இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 3ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா ஏழாவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டனர். இந்த பட்டியலில்  இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ், 4 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்திலும், இலங்கையின் அசித்த ஃபெர்னாண்டோ 10 இடங்கள் முன்னேறி 17ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

மேற்கொண்டு பாகிஸ்தானின் நசீம் ஷா 4 இடங்கள் முன்னேறி 33ஆவது இடத்துக்கும், இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் நான்கு இடங்கள் முன்னேறி 42 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் சர்வதேச டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களையும், அக்சர் படேல் ஆறாவது இடத்திலும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News