Jasprit Bumrah Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

Advertisement

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. 

இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஒல்லி போப் 100 ரன்களுடனும், ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 262 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் அட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம்  இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். முன்னதாக முகமது ஷமி 71 விக்கெட்டிகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், பும்ரா 72 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். 

இங்கிலாந்து மண்ணில் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்

  • ஜஸ்பிரித் பும்ரா - 35 இன்னிங்ஸ்களில் 72 விக்கெட்டுகள்*
  • முகமது ஷமி - 37 இன்னிங்ஸ்களில் 71 விக்கெட்டுகள்
  • இஷாந்த் சர்மா - 34 இன்னிங்ஸ்களில் 63 விக்கெட்டுகள்
  • கபில் தேவ் - 39 இன்னிங்ஸ்களில் 62 விக்கெட்டுகள்
  • ரவீந்திர ஜடேஜா - 48 இன்னிங்ஸ்களில் 61 விக்கெட்டுகள்
Advertisement

இதுதவிர்த்து ஜஸ்பிரித் பும்ரா தனது பெயரில் மற்றொரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார். அதாவது வாசிம் அக்ரம் மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்களை பின்னுக்குத் தள்ளி பும்ரா ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார். அதன்படி சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி ஆசிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் சதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார். 

முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் 146 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது ஜஸ்பிரித் பும்ரா 147 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் அனில் கும்ப்ளே 141 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும், இஷாந்த் சர்மா 140 விக்கெட்டுகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

சேனா நாடுகளில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்து வீச்சாளர்கள்

  • ஜஸ்பிரித் பும்ரா - 147*
  • வாசிம் அக்ரம் - 146
  • அனில் கும்ப்ளே - 141
  • இஷாந்த் சர்மா - 130
  • முத்தையா முரளிதரன் - 125

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News