ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.  இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரு அணிகளும் 28ஆம் தேதி நடைபெறும் தங்களது முதல் போட்டியிலேயே ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர்.

Advertisement

சமீபத்தில் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலம் ஒரு சில சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

Advertisement

ஆசிய கோப்பை தொடரில் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி அதில் 21 சிக்ஸர்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, இன்னும் 6 சிக்ஸர்கள் அடித்தால், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாகித் அஃப்ரிடி 27 போட்டிகளில் விளையாடி அதில் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளதே இத்தனை வருடங்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தற்போது இதனை முறியடிக்கும் வாய்ப்பு ரோஹித் சர்மாவை தேடி வந்துள்ளது.

அதே போன்று ஆசிய கோப்பை தொடரில் இதுவரை மொத்தம் 883 ரன்கள் எடுத்துள்ள ரோஹித் சர்மா, இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் ஆசிய கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அதே போல் 88 ரன்கள் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடிப்பார்.

விராட் கோலி 766 ரன்கள் (16 ஆட்டம்) எடுத்து உள்ளார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக டெண்டுல்கர் 971 ரன்கள் (23 ஆட்டம்) எடுத்துள்ளார்.இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவனான ஜெயசூர்யா 24 போட்டிகளில் விளையாடி அதில் 1220 ரன்கள் எடுத்திருப்பதே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Advertisement

ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள டாப் 5 இந்திய வீரர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் – 971 ரன்கள்
  • ரோஹித் சர்மா – 883 ரன்கள்
  • விராட் கோலி 766 ரன்கள்
  • தோனி – 690 ரன்கள்
  • ஷிகர் தவான் – 613 ரன்கள்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News