ENG vs IND, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; வோக்ஸ், பஷீருக்கு இடம்!

Updated: Wed, Jun 18 2025 21:07 IST
Image Source: Google

England Playing XI For The First Test Against India: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்துள்ளார். 

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடியேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலியில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் காயத்திலிருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் மீண்டும் லெவனில் இடம்பிடித்துள்ளார். முன்னதாக இவர் கடந்த 2024ஆம் ஆண்டு பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அவருடன் இணைந்து பிரைடன் கார்ஸ் முதல் முறையாக சொந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை அவர் நியூசிலாந்து, பாகிஸ்தானில் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அதேசமயம் கஸ் அட்கின்சனின் காயம் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது இடத்தில் ஜோஷ் டங்க் விளையாடவுள்ளார். இதுதவிர்த்து அணியின் சுழற்பந்து வீச்சாளராக சோயப் பஷீரும் இடம்பிடித்துள்ளார். பேட்டிங்கில், ஜாக் கிராலி, பென் டக்கெட் தொடக்க, ஓலி போப் ஜோ ரூட், ஹாரி புரூக், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் ஆகியோரும் தங்களுடைய இடங்களைத் தக்கவைத்துள்ளனர். 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஷோயப் பஷீர், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்.

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை