AUS vs WI, 5th T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.இதில் நடந்து முடிந்த நான்கு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்திய நிலையில், அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 29) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ஷாய் ஹோப் 9 ரன்னிலும், பிராண்டன் கிங் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேசி கார்டி ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோட் - ஷிம்ரான் ஹெட்மையர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரூதர்ஃபோர்ட் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட்மையர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் ஜேசன் ஹோல்டர் 20 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும், ஜோஷ் இங்கிலிஸ் 10 ரன்களுக்கும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 14 ரன்னிலும் என விக்கெடுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய கேமரூன் க்ரீன் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களையும், டிம் டேவிட் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 30 ரன்களையும், மிட்செல் ஓவன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஹார்டி 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News