இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. 

Advertisement

அந்தவகையில், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் எவில் லூயிஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 16 ரன்களைச் சேர்த்திருந்த பிராண்டன் கிங்கும் அட்டமிழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப்பும் முதல் பந்திலேயும், கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய கேசி கார்டி 29 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியானது 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ஜஸ்டீன் க்ரீவ்ஸ் 12 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர்.

மேற்கொண்டு அரைசதம் கடந்திருந்த ரூதர்ஃபோர்டும் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த குடகேஷ் மோட்டி மற்றும் அல்ஸாரி ஜோசப் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குட்கேஷ் மோட்டி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்திருந்த அல்ஸாரி ஜோசப் விக்கெடை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெலிப்படுத்திய குடகேஷ் மோட்டியும் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 251 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத், பிரைடன் கார்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தங்களில் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் இவர்களது பார்ட்னர்ஷிப் 93 ரன்களை கடந்த போது அதிரடியாக விளையாடி வந்த ஜேமி ஸ்மித் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட்டும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது.

Advertisement

Also Read: LIVE Cricket Score

இதில் பென் டக்கெட் 58 ரன்களுக்கும், ஜோ ரூட் 44 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும் அடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி ப்ரூக் 26 ரன்களையும், ஜோஸ் பட்லர் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 29.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜேமி ஸ்மித்தும், தொடர் நாயகனாக ஜோ ரூட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News