ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!

Updated: Tue, Aug 27 2024 08:33 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியானது தற்சமயம் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து அந்த அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது செப்டம்பர் 11ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. 

இத்தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் கூடிய விரையில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் நேற்றைய தினம் ஆஸ்திரேலிய தொடருக்கான இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியின் சீனியர் வீரர்களான மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஜோஷ் ஹல், ஜேக்கப் பெதெல், ஜான் டர்னர், டேன் மௌஸ்லி மற்றும் ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட்டிற்கு பணிச்சுமை காரணமாக இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. மேற்கொண்டு ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் மற்றும் மேத்யூ பாட்ஸ் உள்ளிட்டோருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டு, ஒருநாள் அணியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒருநாள் மற்றும் டி20 என இரு அணிகளும் இடம்பிடித்துள்ளார். 

மேற்கொண்டு காயம் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ், ஸாக் கிரௌலி, மார்க் வுட் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் அதேசமாயம் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத்திற்கு டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனுபவ வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணி எவ்வாறு ஆஸ்திரேலிய அணியை சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

 

இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்டர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கரன், ஜோஷ் ஹல்,வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஆதில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை