இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்திலும், ஜோ ரூட் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 5ஆம் இடத்திலும் உள்ளனர். 

Advertisement

மேற்கொண்டு இந்திய வீரர்களில் ரிஷப் பந்த் 10ஆம் இடத்தில் தொடர்கிறார். அதேசமயம் ஜிம்பாப்வே தொடரில் சதமடித்து அசத்திய பென் டக்கெட் இரண்டு இடங்கள் முன்னேறி 13ஆம் இடத்தையும், ஜிம்பாப்வேவின் சீன் வில்லியம்ஸ் 3 இடங்கள் முன்னேறி 16 ஆவது இடத்தையும், இங்கிலாந்தின் ஒல்லி போப் 6 இடங்கள் முன்னேறி 22 இடத்தையும், ஸாக் கிரௌலி 8 இடங்கள் முன்னேறி 33ஆவது இடத்தையும், ஜிம்பாப்வேவின் பிரையன் பென்னட் 23 இடங்கள் முன்னேறி 75ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் முதால் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 3ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 10ஆம் இடத்தில் தொடர்கிறார். அதேசமயம் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் ஒரு இடம் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

மேற்கொண்டு தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ், வெஸ்ட் இண்டீஸின் கீமார் ரோச், நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா ஒரு இடங்கள் முன்னேறிவுள்ளன. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ஷோயப் பஷீர் 14 இடங்கள் முன்னேறி 43ஆவது இடத்திற்கும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு இடம் முன்னேறி 51ஆவது இடத்தையும் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தையும், வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸ் இரண்டாம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேற்கொண்டு இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தை பிடித்துள்ள நிலையில், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒரு இடம் பின் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News