இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனி நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஜேமி ஸ்மித் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஜேமி ஸ்மித் 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட்டும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட் தனது அரைசதத்தை கடந்த நிலையில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 60 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் பதிவுசெய்த ஜோ ரூட்டும் 57 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹாரி புரூக் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் நிதாமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களில் ஹாரி புரூக்கும், 37 ரன்களில் ஜோஸ் பட்லரும் ஆட்டமிழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் மற்றும் வில் ஜேக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். இதில் ஜேக்கப் பெத்தெல் அரைசதம் கடந்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என் 39 ரன்களில் வில் ஜேக்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேமி ஓவர்டனும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு சதமடிப்பார் எனா எதிர்பார்க்கப்பட்ட ஜேக்கப் பெத்தலும் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 82 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதன் காரணமாக இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்களைச் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தல 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிவுள்ளனர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் க்ரீவ்ஸ் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 10 ரன்களை எடுத்த நிலையில் ஜஸ்டீவ் க்ரீவ்ஸும் ஆட்டமிழந்தார். 

பின்னர் இணைந்த கேப்டன் ஷாய் ஹோப் - கேசி கார்டின் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டி 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷாய் ஹோப்பும் 25 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் அமீர் ஜங்கூ 14, குடகேஷ் மோட்டி 18 ரன்களுக்கும், அல்ஸரி ஜோசப் 12 ரன்களுக்கும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்டன் சீல்ஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 26.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேமி ஓவர்டன், சாகிப் மஹ்மூத் தலா 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன் 1- 0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News