பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்களைக் குவித்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியிக் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 78 ரன்களில் விக்கெட்டைஇழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 450 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்களை குவித்து இன்னிங்ஸை டிக்ளர் செய்ததுடன், முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் முன்னிலையும் பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணியானது அடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் அகா சல்மான் 41 ரன்களுடனும், அமீர் ஜமால் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 115 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி 800 ரன்களை கடந்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளது. அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸில் 800 ரன்களைக் கடப்பது இது மூன்றாவது முரையாகும். மேற்கொண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 800 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4ஆவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

அதேபோல சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அணி 800 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. கடைசியாக கடந்த 1997 ஆம் ஆண்டு இலங்கை அணி கொழுப்பில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 952 ரன்களை குவித்தது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ரன்னும் இது என்பது கூடுதல் சிறப்பாகும். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800+ ரன்களை கடந்த அணிகள்

  • 952/6 டிக்ளர் - இலங்கை vs இந்தியா, கொழும்பு 1997
  • 903/7 டிக்ளர் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, தி ஓவல் 1938
  • 849 - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், கிங்ஸ்டன் 1930
  • 823/7 டிக்ளர் - இங்கிலாந்து vs பாகிஸ்தான், முல்தான் 2024
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News