NZ vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக விரருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-1 கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியானது அடுத்ததாக நவம்பர் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது. அதன் படி நியூசிலாந்து சென்றடைந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் ஜேக்கப் பெட்தெலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மூன்றாம் வரிசையில் களமிறங்குவார் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் குழந்தை பிறப்பின் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள ஜேமி ஸ்மித்திற்கு மாற்றாக ஒல்லி போப் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் உறுதியாகியுள்ளது.
இதுதவிர்த்து பென் டக்கெட், ஸாகிரௌலி, ஹாரி புரூக், கிறிஸ் வோக்ஸ் கஸ் அட்கின்சன், பிரைடர் கார்ஸ் ஆகியோருடன் ஷோயப் பஷீரும் அணியில் இடம் பிடித்துள்ளார். ஏற்கெனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றுவதுடன் புள்ளிப்பட்டியலிலும் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கே), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர்.
Also Read: Funding To Save Test Cricket