இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

Advertisement

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய எம்மா லம்ப் 18 ரன்களுக்கும், அர்மிடேஜ் 19 ரன்களுக்கும், பெய்ஜ் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஃபிரேயா கெம்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பியூமண்ட் சதமடித்து அசத்தினார். அதேசமயம் பொறுப்புடன் விளையாடி வந்த ஃபிரேடா கெம்ப்பும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஃபிரேயா கெம்ப் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் பெஸ் ஹெத் ரன்கள் ஏதுமின்றியும், மேடி வில்லியர்ஸ் 14 ரன்களையும், கேப்டன் கேட் கிராஸ் 8 ரன்களிலும், இஸ்ஸி வாங் 15 ரன்களையும் சேர்க்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாமி பியூமண்ட் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 150 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து மகளிர் அணி தரப்பில் அர்லின் கெல்லி மற்றும் ஃப்ரீயா சார்ஜென்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ரேய்மண்ட் 22 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் கேபி லூயிஸ், ஏமி ஹண்டர், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், லியா பால், அர்லீன் கெல்லி, ஆலிஸ் டெக்டர் என நட்சத்திர வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அயர்லாந்து மகளிர் அணியானது வெறும் 16.5 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ததுடன் 45 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணி தரப்பில் கேட் கிராஸ், லாரன் ஃபில்லர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஃபிரேயா கெம்ப், ஜார்ஜியா டேவிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணியானது 275 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய டாமி பியூமண்ட் ஆட்டநாயகி விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News