Joe Root Records: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதுடன் சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

Advertisement

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இந்நிலையில் இந்த சதத்தின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். 

Advertisement

37ஆவது டெஸ்ட் சதம்

இந்த போட்டியில் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 37ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், ஜேக்ஸ் காலிஸ் இரண்டாம் இடத்திலும், ரிக்கி பாண்டிங் மூன்றாம் இடத்திலும், குமார் சங்கக்காரா 4ஆம் இடத்திலும் உள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்

  • 51 - சச்சின் டெண்டுல்கர் (329 இன்னிங்ஸ்)
  • 45 - ஜாக் காலிஸ் (280 இன்னிங்ஸ்)
  • 41 - ரிக்கி பாண்டிங் (287 இன்னிங்ஸ்)
  • 38 - குமார் சங்கக்காரா (233 இன்னிங்ஸ்)
  • 37* - ஜோ ரூட் (284 இன்னிங்ஸ்)
  • 36 - ஸ்டீவ் ஸ்மித் (210 இன்னிங்ஸ்)

இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்

Advertisement

இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் விளாசும் 11ஆவது சதமாகவும் இது அமைந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையையும் ஜோ ரூட் சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் 11 சதங்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் அதனை ஜோ ரூட் சமன்செய்து அசத்தியுள்ளார். 

இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள்

  • 11* - ஜோ ரூட் (60 இன்னிங்ஸ்)
  • 11 - ஸ்டீவ் ஸ்மித் (46 இன்னிங்ஸ்)
  • 8 - கேரி சோபர்ஸ் (30 இன்னிங்ஸ்)
  • 8 - விவ் ரிச்சர்ட்ஸ் (41 இன்னிங்ஸ்)
  • 8 - ரிக்கி பாண்டிங் (51 இன்னிங்ஸ்)

ஒரு மைதானத்தில் அதிக சதங்கள்

Advertisement

கிரிக்கெட்டின் தாயகம் என்றழைக்கப்படும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜோ ரூட் விளாசும் 8ஆவது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒரு மைதானத்தில் அதிக சதங்களை விளாசிய உலகின் மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் 11 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மைதானத்தில் அதிக சதங்கள்

  • 11 - மஹேல ஜெயவர்தன, கொழும்பு
  • 9 - டான் பிராட்மேன், மெல்போர்ஜ்
  • 9 - ஜாக் காலிஸ், கேப் டவுன்
  • 8 - குமார் சங்கக்கார, கொழும்பு
  • 8* - ஜோ ரூட், லார்ட்ஸ்

சொந்த ஊரில் அதிக சதங்கள்

Advertisement

இதுதவிர்த்து சொந்த மைதானங்களில் அதிக சதங்களை விளாசிய உலகின் இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் ஜோ ரூட் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே, தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், ஆஸ்திரேலியாவின் நிக்கி பாண்டிங் ஆகியோர் தலா 23 சதங்களுடன் முதலிட்த்திலும், இலங்கையின் குமார் சங்கக்காரா மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் தலா 22 சதங்களுடன் இரண்டாம் இடத்தையும் பகிர்ந்துள்ளனர். 

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்

  • 23 - மஹேல ஜெயவர்த்தனே, இலங்கை
  • 23 - ஜாக் காலிஸ், தென்னாப்பிரிக்கா
  • 23 - ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா
  • 22 - குமார் சங்கக்கார, இலங்கை
  • 22* - ஜோ ரூட், இங்கிலாந்து
Also Read: LIVE Cricket Score

இப்போட்டியில் சதமடித்து அசத்தி இருந்த ஜோ ரூட் 10 பவுண்டரிகளுடன் 104 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்துள்ள ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடன் கார்ஸ் அணி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வருகின்றனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News