ஆஸ்திரேலிய அணி தற்சமயம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்திய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆக்டோபர் 29ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில், காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் கிளென் மேக்வெஸ்ல் கடைசி மூன்று போட்டிகளிலும், பென் துவார்ஷுயிஸ் கடைசி இரண்டு போட்டிகளிலும் மட்டுமே விளையாடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதுதவிர சீன் அபோட் முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு காயம் காரணமாக ஒருநாள் தொடரை தவறவிட்ட ஜோஷ் இங்கிலிஸ் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையிலும், அவர் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாவில்லை. இதன் காரணமாக ஜோஷ் பிலீப் கூடுதல் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் டிராவிஸ் ஹெட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆடம் ஸாம்பா, மேத்யூ ஷார்ட் உள்ளிட்டோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். 

ஆஸ்திரேலியா டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட் (முதல் மூன்று போட்டிகள் மட்டும்), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்ட்மேன், க்ளென் மேக்ஸ்வெல் (கடைசி மூன்று போட்டிகள் மட்டும்), டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ் (கடைசி இரண்டு போட்டிகள் மட்டும்), நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட் (முதல் இரண்டு போட்டிகள் மட்டும்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.

Also Read: LIVE Cricket Score

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் தூபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News