ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டது. அந்தவகையில், ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.

Advertisement

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். அதேசமயம் டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

Advertisement

இதில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்னதாக ரஷித் கான், சாய் சுதர்ஷன், ஷாரூக் கான் மற்றும் ராகுல் திவேத்தியா உள்ளிட்ட வீரர்களைத் தக்கவைத்து மீதமிருந்த வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது. பின்னர் மெகா ஏலத்தில் ஜோஷ் பட்லர், காகிசோ ரபாடா, வாஷிங்டன் சுந்தர், முகம்து சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கடும் போட்டிக்கு பிறகு அணியில் சேர்த்துள்ளது. 

இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு தயாராகும் வகையில் அந்த அணி சூரத்தில் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் அந்த பயிற்சி முகாமில் அனுஜ் ராவத், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், குமார் குஷாக்ரா, மஹிபால் லோம்ரோர் மற்றும் அர்ஷத் கான் உள்ளிட்டோர் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

மேற்கொண்டு அணியிம் பயிற்சியாளர் குழுவும் அவர்களுடன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 7 தோல்வி மற்றும் 2 போட்டிகள் முடிவு எட்டப்படாமல் என்று 10 புள்ளிகளை மட்டுமே எடுத்து புள்ளிப்பட்டியலின் 8ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதன் காரணமாகவே தற்போது, இரண்டு மாதங்களுக்கு முன்னரே பயிற்சியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்ட்ன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்னூர் சிங் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த்யா கே.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News