இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான பட்டியலில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணியின் சமாரி அத்தபத்து 3ஆம் இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். 

Advertisement

மேற்கொண்டு நியூசிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மூன்று இடங்கள் முன்னேறி மீண்டும் 10ஆம் இடத்திற்குள் நுழைந்துள்ளார். மேற்கொண்டு தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 20ஆம் இடத்தையும், நியூசிலாந்தின் புரூக் ஹாலிடே 12 இடங்கள் முன்னேறி 24ஆம் இடத்தையும், இந்திய அணியின் யஷ்திகா பாட்டியா 3 இடங்கள் முன்னேறி 45ஆவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பெரிதளவில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதன்படி இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் கேட் கிராஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அதேசமயம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரேனுகா சிங் தாக்கூர் 4 இடங்கள் முன்னேறி 32ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மேற்கொண்டு மகளிர் ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலின் டாப் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் மரிஸான் கேப் முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹெய்லி மேத்யூஸ் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் மூன்றாம் இடத்திலும், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News