வெற்றி பெறுவதற்காக நாங்கள் கடினமாக போராடினோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!

Updated: Thu, Nov 07 2024 10:13 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது பில் சால்ட் மற்றும் டேன் மௌஸ்லி ஆகியோரது அரைசதத்தின் மூலம், ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிரடியான் ஃபினிஷிங்கின் மூலமும் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்களையும், டேன் மௌஸ்லி 57 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் 19 ரன்னில் விகெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த பிராண்டன் கிங் - கேசி கார்டி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் பிராண்டன் கிங் தனது மூன்றாவது சதத்தையும், கேசி கார்டி தனது முதல் சதத்தையும் விளாசியதுடன் 2ஆவது விக்கெட்டிற்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராண்டன் கிங் 102 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 128 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தொடரை இழந்தது குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன்,”இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக நாங்கள் கடினமாக போராடினோம் என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும் இறுதிக்கட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். இந்த தொடரின் முடிவு ஏமாற்றமளித்தாலும், இந்தத் தொடரில் எங்களுக்கு சில நல்ல தருணங்களும் இருந்தன.

Also Read: Funding To Save Test Cricket

இந்த தொடரில் இருந்து நாங்கள் கற்றுகொள்ள நிறைய பாடங்கள் மற்றும் அனுபவங்கள் உள்ளன. இந்தத் தொடரில் நாங்கள் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் யாருமின்றி, புதிய வீரர்களுடன் பங்கேற்றிருந்தோம். அந்தவகையில் இத்தொடரில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர்கள் இதிலிருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதேசமயம் அணியின் கேப்டனாக செயல்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதையாகும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை