டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது இந்தியா!

Updated: Wed, Feb 15 2023 18:40 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் அணிகளுக்கான தவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட், நாளை மறுநாள் டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 

இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் நம்பர் 1 அணியாக இந்திய அணி உள்ளது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிசிசிஐ என இந்திய கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்க்கும் இந்தச் செய்தியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை