இந்திய மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததுடன், 3-0 என்ற் கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.

Advertisement

இந்நிலையில் இந்திய மகளிர் அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 15ஆம் தேதியும், ஒருநாள் தொடர் டிசம்பர் 22ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதில் டி20 தொடரானது நவி மும்பையிலும், ஒருநாள் தொடர் வதோதராவிலும் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், அணியின் துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியில் யஷ்திகா பட்டியா. ஷ்ரெயங்கா பாட்டில், பிரியா புனியா உள்ளிட்டோர் காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்கவில்லை. 

இதன் காரணமாக இந்திய டி20 அணியில் நந்தினி காஷ்யப், சஜனா சஜீவன் மற்றும் ராகவி பிஸ்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் பிரதிகா ராவல், தனுஜா கன்வர் மற்றும் தேஜல் ஹசாப்னிஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து இத்தொடருக்கான இந்திய அணியில் ஷஃபாலி வர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய மகளிர் டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, நந்தினி காஷ்யப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா செத்ரி, தீப்தி சர்மா, சஜனா சஜீவன், ரக்வி பிஸ்ட், ரேணுகா சிங் தாக்கூர், பிரியா மிஸ்ரா, டைட்டாஸ் சாது, சைமா தாக்கூர், மின்னு மணி, ராதா யாதவ்

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்திய மகளிர் ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், உமா செத்ரி, தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, தனுஜா கன்வர், டிடாஸ் சாது, சைமா தாக்கூர், ரேணுகா சிங் தாக்கூர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News