IND vs ENG, 2nd ODI: கோலி விளையாடுவது உறுதி; இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (பிப்ரவரி 9) கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும். ஏற்கெனவே முதல் போட்டியை வென்றுள்ள இந்திய அணி இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
விராட் கோலி விளையாட வாய்ப்பு
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13906 ரன்கள் எடுத்த விராட் கோலி, தனது 17 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக காயம் காரணமாக ஒருநாள் போட்டியைத் தவறவிட்டார். அவர் முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. இருப்பினும் அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் அல்லது யஷஸ்வி
விராட் கோலி பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் பட்சத்தில், முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமக அமைந்தார். அதேசமயம் அறிமுக போட்டியில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் இவர்களில் யாருக்கு லெவனில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்/யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து அணி: பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஜேமி ஓவர்டன், சாகிப் மஹ்மூத், ஜேமி ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர்.