இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி அடுத்தடுத்து விளையாடவுள்ளது. 

Advertisement

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரானது டிராவில் முடிந்தது.

Advertisement

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமிலும், 3ஆவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4ஆவது போட்டி மான்செஸ்டரிலும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்த தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இந்திய அணியும் மீண்டும் இங்கிலாந்தில் அந்த அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என்பதால் இத்தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News