ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில்  விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

Advertisement

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கும் விதமாக தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா ரன்கள் ஏதுமின்றியும், ஸ்மிருதி மந்தனா 10 ரன்களுக்கும் என சர்லோட் டீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்திரேகர் , ஷ்ரெயாங்கா பாட்டில் என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

அதுவரை அணியின் ஸ்கோரை உயர்த்த போராடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய மகளிர் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சார்லோட் டீன், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், சாரா கிளென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News