வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் ராஜினாமா செய்துள்ளார். அதே நேரத்தில், ரோவ்மன் பவலுக்குப் பதிலாக ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஷாய் ஹோப் ஏற்கெனவே ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் டி20 கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பாவெலும் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை 37 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 19 வெற்றிகள் 17 தோல்விகளைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது. 

Advertisement

அதுமட்டுமில்லாமல் அவரது தலைமையின் கீழ், வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டில் மீண்டும் எழுச்சி பெற்று, இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தி இருந்தது. மேற்கொண்டு அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஐசிசி டி20 தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டதில் ரோவ்மன் பாவெல் முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், டி20 அணிக்கு ரோவ்மன் பாவெலுக்கு பதிலாக ஷாய் ஹோப்பை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பிராவோ தனது சமூக வலைதள பதிவில், “வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் வீரர்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்கின்றன என்பதை கரீபியன் மக்களுக்கும் கிரிக்கெட் உலகிற்கும் மீண்டும் ஒருமுறை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.

ஒரு முன்னாள் வீரராகவும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ரசிகராகவும் என்னைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான முடிவுகளில் ஒன்றாகும். நமது டி20 அணி 9ஆவது இடத்தில் இருந்தபோதும் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டு ரோவ்மன் பாவெல், அணியை தரவரிசையில் 3ஆவது இடத்திற்கு முன்னேற உதவினார். ஆனால் தற்போது அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள். இது போன்ற ஒரு கேப்டனை நீக்கள் நீக்கியதற்கு என்ன காரணத்தை கூறுவீரர்கள்” என்று விமர்சித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News