ஐபிஎல் 2021: ஆரஞ்சு, பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்திருக்கும் இந்தியர்கள்!
ஐபிஎல் 2021 சீசனில் இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஐந்து போட்டிகள் முடிவில் பேட்டிங்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 259 ரன்கள் விளாசி ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இரண்டு முறை அரைசதம் விளாசியுள்ள தவானின் அதிகபட்ச ஸ்கோர் 92 ஆகும்.
பஞ்சாப் கிங்ஸ் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுல் ஐந்து போட்டிகளில் 221 ரன்கள் அடித்து 2ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டு பிளெஸிஸ் ஐந்து போட்டிகளில் 214 ரன்கள் அடித்து 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சில் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் 11 விக்கெட்டுடன் 2ஆவது இடத்திலும், ராகுல் சாஹர், கிறிஸ் மோரிஸ் தலா 9 விக்கெட்டுகள் வீழ்த்தியது முறையே 3ஆவது, 4ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.
இப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர் 8 விக்கெட்டுடன் 5ஆவது இடத்தில் நீடிக்கிறார்.