ஐபிஎல் 2021 சீசனில் இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஐந்து போட்டிகள் முடிவில் பேட்டிங்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 259 ரன்கள் விளாசி ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இரண்டு முறை அரைசதம் விளாசியுள்ள தவானின் அதிகபட்ச ஸ்கோர் 92 ஆகும்.

Advertisement

பஞ்சாப் கிங்ஸ் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுல் ஐந்து போட்டிகளில் 221 ரன்கள் அடித்து 2ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டு பிளெஸிஸ் ஐந்து போட்டிகளில் 214 ரன்கள் அடித்து 3ஆவது இடத்திலும் உள்ளனர். 

Advertisement

பந்து வீச்சில் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்  கான் 11 விக்கெட்டுடன் 2ஆவது இடத்திலும், ராகுல் சாஹர், கிறிஸ் மோரிஸ் தலா 9 விக்கெட்டுகள் வீழ்த்தியது முறையே 3ஆவது, 4ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர் 8 விக்கெட்டுடன் 5ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News