ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நட்சத்திர வீரர்கள் காயத்தை சந்திப்பது தொடர்கதையாகி வருகிறது. இதில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஷிகர் தவான் தற்போது காயத்தை சந்தித்துள்ளார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஷிகர் தாவன் தனது தோல்பட்டையில் காயத்தை சந்தித்தார். 

Advertisement

இதையடுத்து அவர் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சாம் கரன் வழிநடத்தினார். இந்நிலையில் ஷிகர் தாவனின் காயம் எப்படி உள்ளது, அடுத்த போட்டியில் அவர் களமிறங்குவாரா என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Advertisement

இந்நிலையில், ஷிகர் தவான் மேலும் சில நாள்கள் அணியில் இணைய மாட்டார் என்று அந்த அணியின் ஆலோசகர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “துரதிருஷ்டவசமாக, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஷிகர் தவான் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. மேலும் அவரது காயம் குணமடையாததால் இன்னும் சில போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார்.  

ஷிகர் தவான் போன்ற அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர் எப்போது அணிக்கு மிகவும் முக்கியம். எனெனில் அவர் இதுபோன்ற மைதானங்களில் விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளார். மேலும் அவர் தற்போது சிகிச்சையில் உள்ளதால் அவரது உடல்நிலையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனால் அவர் மேலும் 7 முதல் 10 நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிவரை போராடியும் 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்து குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News