இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது.

Advertisement

இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா்.

Advertisement

முன்னதாக அவரை அணியிலிருந்து விடுவித்த கொல்கத்தா அணியே, தற்போது ஏலத்தில் போட்டி போட்டு அவரை மீண்டும் வாங்கியிருக்கிறது. மேலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.  மேலும் 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் விளையாடும் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 

இப்படி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை வாங்கியுள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேட்ச்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், அல்லா கசன்ஃபர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.

பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் பாடிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்சல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், பிரைடன் கார்ஸ், கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, ஈஷான் மலிங்கா, சச்சின் பேபி.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: கேஎல் ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, ஃபஃப் டு பிளெஸ்சிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்ட்ன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்னூர் சிங் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த்யா கே.

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நார்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பிர்மன் பாண்டே பவல், ஸ்பிர்மன் பான்டே பவல் , அஜிங்க்யா ரஹானே, அனுகுல் ராய், மொயின் அலி, உம்ரான் மாலிக்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப்,  ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News