இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 12ஆம் தேதி லீட்ஸீல் நடைபெறவுள்ளது. 

Advertisement

இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஒரே அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்தத் தொடரில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

முன்னதாக தென்  ஆப்பிரிக அணியின் ஆலன் டொனால்ட் 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 330 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 28ஆம் இடத்தில் உள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 323 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் 29ஆவது இடத்தில் உள்ளார். இதனல் இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்த சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. 

இந்திய அணியின் மிகவும் நம்பகமான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 15 முறையும், ஒரு போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 3 முறையும் வீழ்த்தியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில் ஜடேஜா இங்கிலாந்து நிலைமைகளில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமிலும், 3ஆவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4ஆவது போட்டி மான்செஸ்டரிலும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News