இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம் - பிசிசிஐ!

Updated: Mon, Jan 09 2023 19:28 IST
Jasprit Bumrah Ruled Out Of India's Upcoming ODI Series Against Sri Lanka (Image Source: Google)

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் முதல் போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்திலும் த்ரில் வெற்றியை பெற்றன.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் துவங்கி நடைபெற்ற நிலையில், அதில் சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் விளாசி அணி 200+ ரன்களை கடப்பதை உறுதி செய்தார். இறுதியில் இந்தியா மெகா வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகளும் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் கௌகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பகலிரவு ஆடமாக மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். மூன்று வருடங்களில் மூன்றாவது முறையாக ரோஹித், கோலி, பும்ரா ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

ஷிகர் தவன் நீக்கப்பட்டு அவரது இடத்திற்கு ஷுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் போன்றவர்களும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியிலிருந்து பும்ராவை நீக்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பும்ரா தற்போதுதான் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். உடனே அவரை அணியில் சேர்த்தால், பும்ராவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுவிடுமோ என பிசிசிஐ அஞ்சுகிறது.

ஏற்கனவே ஆசியக் கோப்பையில் காயம் காரணமாக‍ அவதிப்பட்ட பும்ராவை, அடுத்து ஆஸ்திரேலிய தொடரின்போது வம்பாக சேர்த்தார்கள். அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக பும்ராவால் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போதும் பும்ராவை சேர்த்து, அவர் காயம் காரணமாக மீண்டும் விலகும் பட்சத்தில், பிப்ரவரியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ராவால் பங்கேற்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.

இதனால்தான், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை