பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்கலைக் குவித்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 102 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் 104 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 78 ரன்களில் விக்கெட்டைஇழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் டக்கெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 84 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  ஆனாலும் இப்போட்டியில் அபாரமாக விளையடி வந்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 35ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதேசமயம் அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக்கும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 492 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஜோ ரூட் 176 ரன்களுடனும், அதிரடியாக விளையாடி வரும் ஹாரி புரூக் 141 ரன்களுடனும் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். 

 

இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6ஆவது இரட்டத்தை சதத்தை பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அந்த அணியின் முன்னாள் வீரர் வாலி ஹம்மண்ட் 7 இரட்டை சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

 

இதவிர இப்போட்டியில் இரட்டை சதமடித்தன் மூலம் ஜோ ரூட் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 20ஆயிரம் சர்வதேச ரன்களையும் கடந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 15,737 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான ஜோ ரூட் இதுநாள் வரை 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 35 சதங்கள், 64 அரைசதங்களுடன் 12,614 ரன்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 171 போட்டிகளில் விளையாடி 16 சதங்கள், 39 அரைசதங்கள் என 6,522 ரன்களையும், டி20 கிரிகெட்டில் 32 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்களுடன் 893 ரன்களையும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News