வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரர்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வரும் நாளை (ஜூலை 10ஆம்) புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

Advertisement

இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.  இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்திய அணியில் கஸ் அட்கின்ஸன் மற்றும் ஜேமி ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் வீரார் மஹெலா ஜெயவர்தனே மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நைரன் சந்தர்பால் ஆகியோருடைய வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது இங்கிலாந்து அணிக்காக 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 11, 736 ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 10ஆம் இடத்தில் உள்ளார். 

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் மேற்கொண்டு 132 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 8ஆவது வீரர் எனும் சாதனையைப் படைப்பார். முன்னதாக இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நரைன் சந்தர்பால் 11,867 ரன்களை எடுத்து 8ஆம் இடத்திலும், இலங்கை அணியின் மஹிலா ஜெயவர்தனே 11,816 ரன்ளுடன் 9ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்திலும், ஆஸ்திரெலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக்ஸ் காலிஸ் 13,289 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 13,288 ரன்களைச் சேர்த்து நான்காம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News