வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ், ரெஹான் அஹ்மத் சேர்ப்பு!

Updated: Fri, Oct 25 2024 09:02 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதில் டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த இங்கிலாந்து அணியானது, ஒருநாள் தொடரில் 2-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜாஃபர் சோஹனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஜான் டர்னர், டேன் மௌஸ்லி ஆகியோருக்கு இத்தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டி20 அணிக்கான கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என்றும், அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் மைக்கேல் பெப்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை லியாம் லிவிங்ஸ்டோன் வழிநடத்துவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் வரவுள்ள வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் செர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் ஜோர்டன் காக்ஸ் ஒருநாள் தொடரில் விளைடாடுவது உறுதியாகியுள்ள நிலையில், டி20 தொடரில் இடம்பிடிப்பார் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் இங்கிலாந்து அணி அடுத்ததாக நியூசிலாந்துடன் விளையாடவுள்ள காரணத்தால் அவருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரெஹான் அஹ்மத், இப்போட்டி முடிந்த கையோடு இங்கிலாந்து அணியில் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் (ஒருநாள் அணி கேப்டன்), சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர், மைக்கேல் பெப்பர் (ஒருநாள் அணி), ஜோர்டன் காக்ஸ், ரெஹான் அஹ்மத்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை