ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் பல அணிகளும் தங்களது டி20 அணியை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணிக்கு உலக கோப்பையை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

Advertisement

ஆனால் டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வெறும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தான் விளையாடுகிறது. எனினும் மார்ச் முதல் ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாடுவதால் அது கூடுதல் பயிற்சியாக இருக்கும் என இந்திய அணி நிர்வாகம் நினைக்கிறது.

Advertisement

இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அணி தற்போது உலக கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் சுற்றுலே தோல்வியை தழுவி இங்கிலாந்து அணி பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதனால் இழந்த பெருமையை மீட்கும் வகையில் இங்கிலாந்து புது கணக்கு போட்டுள்ளது. 

வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய இங்கிலாந்து அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பொல்லார்டை, தங்களது அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக பொல்லார்டை ஒப்பந்தம் செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.

வரும் டி20 உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் தான் நடைபெறுகிறது என்பதால் பொல்லார்டின் வருகை இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். மேலும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும்? டி20 போட்டியில் ரன்களை எப்படி சேஸிங் செய்ய வேண்டும் போன்ற நுணுக்கங்களை பொல்லார்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆடுகளம் எவ்வாறு செயல்படும்? டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்வதா இல்லை பந்துவீச்சு தேர்வு செய்வதா என்பது போன்ற நுணுக்கங்கள் எல்லாம் புட்டு புட்டு வைத்துவிடுவார். இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். ஏற்கனவே பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வல்லுனராக இருப்பதால் அவர் கோச்சிங்கிற்கு ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News