ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கடந்த போட்டியில் லக்னோ அணியானது சன்ரைசர்ஸ் அணியிடம் படுதோல்வியைச் சந்திதுள்ளது.

Advertisement

இந்நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இக்காணொளியானது இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின. 

Advertisement

அதன்பின் கேஎல் ராகுல் அணியினருடன் பயணிக்காமல் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகினர். இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தற்போதுவரை அணியினருடன் இணையவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 460 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News