சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதால், கேஎல் ராகுல் இந்திய அணியை வழிநடத்துவதாக இருந்தது.

Advertisement

ஆனால் கேஎல் ராகுல் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியதால் ரிஷப் பந்த் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். 

Advertisement

அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று ஒருநாள், டி20 தொடர்களில் ஆடுகிறது. கடந்த ஆண்டு இந்திய அணி  இங்கிலாந்து சென்றபோது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. கரோனா காரணமாக ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூலை ஒன்றாம் தேதிதொடங்கி நடக்கிறது.

இந்நிலையில் காயம் காரணமாக அந்த ஒரு டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கான அணியில் கேஎல் ராகுல் இல்லை. இதற்கிடையில் அவரது காயத்திற்கு மேல்சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றார்.

இந்நிலையில் ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கேஎல் ராகுல். 

ஜெர்மனியின் மியூனிக்கில் இருந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த சில வாரங்கள் கடினமானதாக இருந்தன. ஆனால் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. காயம் குணமாகி வருகிறது. காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான பயணம் தொடங்கி விட்டது. அனைவருடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News