ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

Advertisement

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நட்சத்திர வீரர்கள் மேக்ஸ் ஓடவுட் 23 ரன்களிலும், தேஜா நிடமனுரு 26 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

பின்னர் களமிறங்கிய வீரர்களில் டிம் பிரிங்கில் 16 ரன்களையும், ஷரிச் அஹ்மத் 15 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தஸ்கின் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு பர்வெஸ் ஹொசைன் எமான் மற்றும் தன்ஸித் ஹசன் தமிம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பர்வேஸ் 15 ரன்னிலும், தன்ஸித் ஹசன் 29 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் சைஃப் ஹொசைன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Also Read: LIVE Cricket Score

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லிட்டன் தாஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்களையும், சைப் ஹசன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் வங்கதேச அணி 13.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News