ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரிலுள்ள தோஹாவில் நேற்று தொடங்கியது. இதன் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, ஆசிய லையன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆசிய லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் திலகரத்னே தில்சன் 5 ரன்களிலும், ஆஸ்கர் ஆஃப்கான் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த உபுல் தரங்கா - மிஸ்பா உல் ஹக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.  இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிஸ்பா உல் ஹக் அரைசதம் கடந்தார்

Advertisement

அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட உபுல் தரங்கா 40 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மிஸ்பா உல் ஹக் 50 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 73 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஷாகித் அஃப்ரிடி, திசாரா பெரேரா, அப்துல் ரஸாக் ஆகியோர் ஓரளவு ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆசிய லையன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்தியா தரப்பில் பர்விந்தர் அவானா, ஸ்டூவர்ட் பின்னி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா மகாராஜாஸ் அணியில் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா - முரளி விஜய் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

இதில் அதிரடியாக விளையாடிய முரளி விஜய் 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 3 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கம்பீருடன் ஜோடி சேர்ந்த முகமது கைஃப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் கௌதம் கம்பீர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து முகமது கைஃப் 22 ரன்களிலும், யூசுப் பதான் 14, ஸ்டூவர்ட் பின்னி 8, இர்ஃபான் பதான் 19 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா மகாராஜாஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆசிய லையன்ஸ் தரப்பில் சோஹைல் தன்விர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது. 

Advertisement

இதன்மூலம் ஆசிய லையன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மகாராஜாஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மகாராஜஸ் - உலக ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News