South Africa Squad: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டேவிட் மில்லர், கேசவ் மஹாராஜ் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸியை ஒயிட் வாஷ் செய்ய முயற்சிக்கும். அதேசமயம், ஆஸ்திரேலிய அணி இதில் வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து  தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடரும், அடுத்ததாக டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், டி20 அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும் தொடர்கின்றனர். 

அதேசமயம் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ள டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் உள்ளிட்டோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் டி20 அணியின் அதிரடி பேட்டர் டேவிட் மில்லர், நட்ச்த்திர சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹாராஜ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேலும் மார்கோ ஜான்சென், ரியான் ரிக்கெல்டன், டெவால்ட் பிரீவிஸ் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், கேசவ் மகராஜ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கி, குவேனா மபாகா, காகிசோ ரபாடா, டெவால்ட் பிரீவிஸ், ஐடன் மார்க்ராம், ரியான் ரிக்கல்டன், நந்த்ரே பர்கர், வியான் முல்டர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், செனுரன் முத்துசாமி.

Also Read: LIVE Cricket Score
Advertisement

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கேசவ் மகராஜ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கார்பின் போஷ், குவேனா மபாகா, ககிசோ ரபாடா, டெவால்ட் பிரீவிஸ், டேவிட் மில்லர், ரியான் ரிக்கல்டன், டொனோவன் ஃபெரீரா, செனுரன் முத்துசாமி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், லுங்கி இங்கிடி, லிசாட் வில்லியம்ஸ்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News