தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அசத்திய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதுடன், ஆட்டநாயகி விருதையும் வென்றார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மகளிருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

Advertisement

அதேபோல் இப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். மேற்கொண்டு முதல் ஒருநாள் ஆட்டத்தில் சோபிக்க தவறவிய தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனை லாரா வோல்வார்ட் இரண்டு இடங்கள் பின் தங்கி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

அதேபோல் மகளிர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்தின் கேட் கிராஸ் மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றன. இதில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 4ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் மர்க்ரெட் ஜோனஸ், அயபொங்கா காக்கா ஆகியோர் 7 மற்றும் 8ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். 

ஐசிசி ஒருநாள் மகளிர் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமுல் நிகழவில்லை. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை மரிஸான் கேப் முதலிடத்தில் நீடித்து வருகிறார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா தொடர்ந்து 6ஆம் இடத்தில் நீடிக்கிறார். மேற்கொண்டு இந்திய வீராங்கனை பூஜா வஸ்திரேகர் 4 இடங்கள் முன்னேறி 18ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News