நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Updated: Tue, Feb 06 2024 11:30 IST
நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 09ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரை முடித்த கையோடு ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மிட்செல் மார்ஷ் தலைமையிலான இந்த அணியில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ், மேத்யூ வேட், கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், டேவிட் வார்னர் போன்ற நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா அணி: மிட்செல் மார்ஷ் (கே), பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை