ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் தொடரை நடத்தும் இந்தியாவோடு,  பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் 45 லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. 

Advertisement

இதனிடையே, செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தங்களது சார்பில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள, 15 பேரின் விவரங்களை உறுதி செய்ய வேண்டும். அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள தங்களது வீரர்களின் விவரங்களை வெளியிட்டுவிட்டன. அந்த வரிசையில் இங்கிலாந்தும் உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணி விவரங்களை 

Advertisement

ஜோஸ் பட்லர் தலைமயிலான அணியில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஏற்கனவே அறிவித்தபடி, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பை தொடருக்காக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். முதுகு வலி காரணமாக அவதிப்படும் ஜேசன் ராய்க்கு பதிலாக ஹாரி ப்ரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ப்ரூக்கின் சராசரி வெறும் 12 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசிய டேவிட் மாலனும் அணியில் இடம்பெற்றுள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியில் இருந்த ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் நடப்பாண்டு தொடரிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதேசமயம் காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியின் கூடுதல் வீரராக ஜோஃப்ரா ஆர்ச்சர் பயணிப்பார் என்று அந்த அணியின் முன்னாள் வீரரும், தேர்வு குழு தலைவருமான லுக் ரைட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து அணியின் சிறந்த விஷயம் ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியுடன் பயணிப்பது மற்றும் அவரது மறுவாழ்வு மற்றும் பிசியோக்கள் மற்றும் குழுவைச் சுற்றி இருப்பதுதான். அவர் எவ்வளவு நன்றாக இருக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக இருக்க அவரை தயார்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஒரு காயம் ஏற்பட்டால், அவர் போட்டியின் பின் இறுதியில் மாற்ற முடியும், ஆனால் வெளிப்படையாக நாங்கள் அவரது உடற்தகுதியை மேம்படுத்த நாளுக்கு நாள் வேலை செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ். 

கூடுதல் வீரர்: ஜோஃப்ரா ஆர்ச்சர் 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News