தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இப்போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் அறிமுக வீரராக டோனி டி ஸோர்ஸிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஸாக் கிரௌலி பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் எம்ஐ எமிரேட்ஸ் அணியில் காலின் இங்கிரம் பிளேயிங் லெவனில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸி 2 ரன்னில் விக்கெட்டைஇழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 10 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்னிலும், அதிரடியாக தொடங்கிய மார்கோ ஜான்சன் 7 ரன்னிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த டேவிட் பெடிங்ஹாம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுட 45 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 77 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஆண்டிலே சிமெலேன் 21 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எம்ஐ கேப்டன் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வென்டர் டுசென் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கெல்டன் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 59 ரன்களையும், ரஸ்ஸி வென்டர் டுசென் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 11 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News