ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.

Advertisement

இந்நிலையில் எதிவரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரின் வெற்றியாளரை முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரும் வெல்லும் அணியை காணித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும். அதேசமயம் இத்தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை நான் தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான் சதமடித்து தனது ஃபார்மை மீட்டுள்ளார். அதனால் இத்தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படுவதுடன் அதிக ரன்களையும் குவிப்பார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் சாதனை சிறப்பாக உள்ளது. இதுவரை அவர் 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் ஒரு சதம், 4 அரைசதங்கள் என 53.44 என்ற சராசரியுடன் 481 ரன்களை எடுத்துள்ளார். மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இண்ட்ஜிய அணிக்காக அதிக ரன்களைச் சேர்த்த வீரர்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா. ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News