பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

Advertisement

அதன்பின் இணைந்த அணியின் துணைக்கேப்டன் சௌத் ஷகீல் மற்றும் விக்கெட் கீப்பர் பெட்டர் முகமது ரிஸ்வான் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். இருவரும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு 5ஆவது விக்கெட்டிற்கு 240 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

Advertisement

அதன்பின் 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத் ஷகீல் தனது விக்கெடை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் 150 ரன்களைக் கடந்ததுடன், ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 171 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 446 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது விக்கெட் இழப்பின்றி 27 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஷத்மான் இஸ்லாம் 12 ரன்களையும், ஜாகிர் ஹசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 421 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணியானது இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் 171 ரன்களைச் சேர்த்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்தின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் 146 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதனை முகமது ரிஸ்வான் முறிடியடித்து அசத்தியுள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் விக்கெட் கீப்பர்களின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்

  • 171* vs வங்கதேசம் - முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), 2024
  • 146 vs இங்கிலாந்து - ரிஷப் பந்த் (இந்தியா), 2022
  • 141* vs வெஸ்ட் இண்டீஸ் - குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா), 2021
  • 141 vs இலங்கை - லிட்டன் தாஸ் (வங்கதேசம்), 2022

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News