SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சதமடித்து அசத்தியதுடன் சிறப்பு சாதனை ஒன்றையும் படைத்துள்ளனர். 

Advertisement

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிகூர் ரஹிம் அகியோரின் அபாரமான சதங்கள் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 292 ரன்களைச் சேர்த்துள்ள்து. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய முஷ்ஃபிக்கூர் ரஹிம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 106 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார். முன்னதாக முகமது அஷ்ரஃபுல் 18 இன்னிங்ஸ்களில் 751 ரகளை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 800+ ரன்களைச் சேர்த்து முதலிடம் பிடித்துள்ளர். 

இலங்கையில் அதிக ரன்களை எடுத்து வங்கதேச வீர்ர்கள்

  • முஷ்ஃபிக்கூர் ரஹீம் - 800+ ரன்கள் (15 இன்னிங்ஸ்)
  • முஹம்மது அஷ்ரஃபுல் - 751 ரன்கள் (18 இன்னிங்ஸ்)
  • தமீம் இக்பால் - 556 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
  • மோமினுல் ஹக் - 428 ரன்கள் (10 இன்னிங்ஸ்)
  • ஹபீபுல் பஷார் - 291 ரன்கள் (16 இன்னிங்ஸ்)

ஷான்டோ-ரஹீமின் வலுவான பார்ட்னர்ஷிப்

இப்போட்டியில் வங்கதேச அணி அணி 45 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹீம் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில்  நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது 6அவது டெஸ்ட் சதத்தையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 12ஆவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 247 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.

Advertisement

Also Read: LIVE Cricket Score

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News