Najmul Hossain Shanto Record: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார். 

Advertisement

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 495 ரன்களையும், அதனைத்தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 485 ரன்னிலும் ஆல் அவுட்டானது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 285 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

Advertisement

பின்னர் 295 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி இலங்கை அணி ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 4  விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்தது. இதன் காரணமாக இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்திய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தியதன் மூலம் வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். அதன்படி வங்கதேச அணியின் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் எனும் சாதனையை நஜ்முல் ஹொசைன் சாண்டோ படைத்துள்ளார். மேற்கொண்டு அவர் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். 

முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதமடித்து அசத்தி இருந்தார். இதுதவிர்த்து இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் மொத்தமாக 273 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் அவர் முஷ்ஃபிக்கூர் ரஹீமின் 12 ஆண்டுகால சாதனையையும் முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து முஷ்ஃபிக்கூர் ரஹீம் 200 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அதனை முறியடித்துள்ளார். மேற்கொண்டு வங்கதேச அணிக்காக ஒரு டெஸ்டில் கேப்டனாக அதிக ரன்களை எடுத்த வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News